/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி மீட்பு குழு குப்புசாமிக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும்
/
காவிரி மீட்பு குழு குப்புசாமிக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும்
காவிரி மீட்பு குழு குப்புசாமிக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும்
காவிரி மீட்பு குழு குப்புசாமிக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும்
ADDED : ஜூன் 27, 2024 03:39 AM
கரூர்: காவிரி மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கிய குப்புசாமிக்கு, நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என, காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி மீட்பு குழுவில் இணைந்து, விவசாயிகளின் நலனுக்காக போராடிய முன்னாள் எம்.பி., முத்துசாமிக்கு கரூரில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சிலை அமைக்கவுள்ள தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிக்கிறோம். கடந்த, 1970ல் காவிரி மீட்பு குழு என்ற அமைப்பை குப்புசாமி என்பவர் தொடங்கினார். அவருடன் முன்னாள் எம்.பி., முத்துசாமி, முன்னாள் ஐ.பி.எஸ்., கார்த்திகேயன், முன்னாள் தலைமை பொறியாளர் மணவாளன், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த மன்னார்குடி ரங்கநாதன், காவேரி தொழில் நுட்பக்குழு தலைவர் மோகனகிருஷ்ணன், கி.ஆ.பெ., விஸ்வநாதன் உள்பட பலர் காவிரிக்காக போராட களமிறக்கிய தலைவர்.
காவிரி பிரச்னையை முன்னிறுத்தி, தமிழ்நாட்டிலேயே முதல் குரல் கொடுத்து காவிரி மீட்பு குழு அமைப்பை தொடங்கி, ஆயுள் முழுவதும் உழைத்த குப்புசாமிக்கு நினைவு சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்
பட்டுள்ளது.