/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் எறிபத்த நாயனார் யானை துண்டித்த விழா நாளை நடக்கிறது
/
கரூரில் எறிபத்த நாயனார் யானை துண்டித்த விழா நாளை நடக்கிறது
கரூரில் எறிபத்த நாயனார் யானை துண்டித்த விழா நாளை நடக்கிறது
கரூரில் எறிபத்த நாயனார் யானை துண்டித்த விழா நாளை நடக்கிறது
ADDED : அக் 09, 2024 12:56 AM
கரூரில் எறிபத்த நாயனார் யானை
துண்டித்த விழா நாளை நடக்கிறது
கரூர், அக். 9-
கரூரில் எறிபத்த நாயனார், யானை துண்டித்த விழா நாளை (10 ல்) நடக்கிறது.
கரூரில் பிரசித்தி பெற்ற, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பல விழாக்கள் நடக்கிறது. அதில், எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா, யானை துண்டித்த விழா மிகவும் பிரசித்தி பெற்றது.மகா அஷ்டமி நாளான நாளை காலை, 8:30 மணிக்கு, கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில், சிவனாடியார்கள் ஒன்று சேர்ந்து, யானை துண்டித்த விழாவை தத்ருபமாக செய்து காட்டுவர். அதை தொடர்ந்து, சிவனடியார்கள், பக்தர்கள் பூக்குடலையுடன் பங்கேற்கும் ஊர்வலம் நடக்கிறது. முன்னதாக விழா பந்தலில் நாளை காலை, 6:00 மணிக்கு பக்தர்களுக்கு பூக்குடலை வழங்கப்படும். எறிபத்த நாயனார் யானை துண்டித்த விழாவையொட்டி, 100 க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில்
ஈடுபட உள்ளனர்.