'பறிமுதல் செய்யப்பட்ட தொகை உரிய ஆவணம் மூலம் பெறலாம்'
'பறிமுதல் செய்யப்பட்ட தொகை உரிய ஆவணம் மூலம் பெறலாம்'
ADDED : மார் 19, 2026 07:30 AM
கரூர்::பறிமுதல்
தொகை மற்றும் பொருட்களுக்கு, உரிய ஆவணம் வழங்கி திரும்ப பெற்றுக்
கொள்ளலாம் என, மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார் தெரிவித்தார்.
தமிழக
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முறையான ஆவணங்-களின்றி பணம் மற்றும்
பொருட்களை எடுத்து செல்வதை கண்-காணித்திட, மாவட்டத்தில் 24 மணி
நேரமும் செயல்படக்கூடிய பறக்கும்படை குழுக்கள், நிலையான
கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய
அறிவுரைகளின்படி முறையான ஆவணங்க-ளின்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல்
எடுத்து செல்லப்படும் தொகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு
வருகிறது. கைப்பற்றப்படும் தொகைக்குரிய ஆவணங்கள், அச்சமயத்தில்
இல்லாதிருக்கும் பட்சத்தில், கைப்பற்றும் தொகையானது தேர்தல்
முறைகேடுகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என நிரூ-பிக்கும்
வகையிலான ஆவணங்களை, தினந்தோறும் மாலை, 4:00 மணியளவில் கரூர்
கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட அலுவலர்,
கூடுதல் கருவூல அலுவலர், கணக்கு அலுவலர் மற்றும் கலெக்டர் நேர்-முக
உதவியாளர் (கணக்கு) ஆகியோர் அடங்கிய மாவட்ட குறைதீர் குழு முன்பாக
ஆஜராகி, உரிய ஆவணங்களை சமர்ப்-பித்து கைப்பற்றப்பட்ட தொகை, பொருட்
களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
