/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேலாயுதம்பாளையத்தில் வாரச்சந்தை கட்டுமான பணி விறுவிறு
/
வேலாயுதம்பாளையத்தில் வாரச்சந்தை கட்டுமான பணி விறுவிறு
வேலாயுதம்பாளையத்தில் வாரச்சந்தை கட்டுமான பணி விறுவிறு
வேலாயுதம்பாளையத்தில் வாரச்சந்தை கட்டுமான பணி விறுவிறு
ADDED : ஜன 29, 2024 12:39 PM
கரூர்: கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் மலைவீதியில், வாரச்சந்தை உள்ளது. இங்கு வியாழக்கிழமை தோறும் சந்தை நடக்கிறது. இங்கு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
காய்கறிகள் மட்டுமின்றி பழங்கள், பலசரக்கு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பூ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைப்பதால் பொதுமக்கள் பலரும் வாரச்சந்தையில் வருகின்றனர். வாரச்சந்தையில் குடிநீர், கழிப்பறை, போதிய கட்டிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
இல்லை.
இந்த வளாக கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப் படையில், 94 லட்சம் ரூபாய் செலவில் வாரச்சந்தை வளாகம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு, 150 கடைகள் கட்டுமான பணி உள்பட பல்வேறு பணிகள்
நடக்கின்றன.
தற்போது, 90 சதவீதம் பணி நிறைவடைந்த நிலையில், விரைவில் கட்டுமான பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டு விடப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.