/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில் பரவலாக மழை பஞ்சபட்டியில் 46.80 மி.மீ., பதிவு
/
மாவட்டத்தில் பரவலாக மழை பஞ்சபட்டியில் 46.80 மி.மீ., பதிவு
மாவட்டத்தில் பரவலாக மழை பஞ்சபட்டியில் 46.80 மி.மீ., பதிவு
மாவட்டத்தில் பரவலாக மழை பஞ்சபட்டியில் 46.80 மி.மீ., பதிவு
ADDED : அக் 06, 2024 03:00 AM
கரூர்: மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், அதிக-பட்ச-மாக பஞ்சபட்டியில், 46.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது
கடந்த சில வாரங்களாக, அக்னி நட்சத்திரத்துக்கு இணையாக வெயில் கொளுத்தி யது. பொதுமக்கள் வெப்பத்தால் தவித்து போயினர். பருவ நிலையின் திடீர் மாற்றம் மக்களை பாதித்த நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்-கக்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமி-ழகத்தில் நேற்று முன்தினம் மாலை பல இடங்களில் மழை பெய்-தது.கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்-தது. இதனால் முக்கிய சாலைகள், தெருக்களில் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. சில கிராமங்களில் குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் வர தொடங்கியதால், விவசா-யிகள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று காலை 8:00 மணி நிலவரப்-படி அதிகபட்சமாக பஞ்சபட்டியில், 46.80 மி.மீ., மழை பெய்-துள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விபரம்: கரூர், 28.50 மி.மீ., அரவக்
குறிச்சி, 18.20, அணைபாளையம், 13.50, க.பரமத்தி, 41.20, குளித்தலை, 13.20, தோகைமலை, 17.50, கிருஷ்ணராயபுரம், 6, மாயனுார், 6, கடவூர், 38.40, பாலவிடுதி, 9, மைலம்பட்டி, 26 மி.மீ., மழை பதிவாகி உள்ளது, மாவட்டத்தில் மொத்தம், 264.60 மி.மீ., மழை பதிவாகி இருக்கிறது.