/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மக்களை கையேந்த வைப்பதுதான் திராவிட மாடலா:கள் இயக்கம் கேள்வி
/
மக்களை கையேந்த வைப்பதுதான் திராவிட மாடலா:கள் இயக்கம் கேள்வி
மக்களை கையேந்த வைப்பதுதான் திராவிட மாடலா:கள் இயக்கம் கேள்வி
மக்களை கையேந்த வைப்பதுதான் திராவிட மாடலா:கள் இயக்கம் கேள்வி
ADDED : ஜன 12, 2024 05:31 PM
கரூர் : '' பொங்கல் பொருட்களை கொடுத்து, மக்களை கையேந்த வைப்பதுதான், திராவிட மாடலா என தெரியவில்லை,'' என்று, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூரில் நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில், பல மாநிலங்களில் தை முதல் தேதியை சங்கராந்தி, சூரிய வழிபாடு என கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் பொங்கல் என்ற பெயரில், கொண்டாடி வருகிறோம். மற்ற மாநிலங்களில் தை முதல் நாளையொட்டி, பரிசு பொருட்கள் வழங்குவது இல்லை. தமிழகத்தில் மட்டும்தான், அரிசி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. பொங்கல் பொருட்களை கொடுத்து, மக்களை கையேந்த வைப்பதுதான், திராவிட மாடலா என தெரியவில்லை. இலவச பொருட்கள் வழங்குவதால், பொங்கல் பண்டிகையை, அரசு கொச்சைபடுத்துகிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலீடு இலக்கை மிஞ்சி விட்டதாக தமிழக அரசு பெருமை பேசி வருகிறது. வளர்ந்த நாடுகளில், தடை செய்யப்பட்ட தொழில்களுக்கு, தமிழகத்தில் சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது. குறிப்பாக, திருப்பூர் ஆயத்த ஆடை தொழில் வளர்ச்சியால், நொய்யல் ஆறு சாயக்கழிவால் செத்து போய் விட்டது. வரவிருக்கும் முதலீடுகளும், சுற்றுச்சூழலை கெடுப்பதாக இருக்கும். வேலை வாய்ப்புகளும் அவ்வளவாக இருக்காது.
டெல்டா மாவட்டங்களில், சம்பா பயிரை காப்பாற்ற வரும், 31 வரை வினாடிக்கு, 6,000 கனஅடி தண்ணீரை மேட்டூர் அணையில் இருந்து திறக்க வேண்டும். வரும், 21ல் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள, கள் இறக்கும் போராட்டம் வெற்றியில் முடியும்.
இவ்வாறு கூறினார்.