/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இடிந்து விழும் நிலையில் ஈமக்கிரியை மண்டபம்
/
இடிந்து விழும் நிலையில் ஈமக்கிரியை மண்டபம்
ADDED : ஜூலை 11, 2025 01:15 AM
கரூர், கரூர் திருமாநிலையூரில், ஈமக்கிரியை மண்டபம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர், திருமாநிலையூரில் அமராவதி ஆற்றங்கரையோரம், ஈமக்கிரியை மண்டபம் கட்டப்பட்டது.
இதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள், சில காலம் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் மண்டபம் பயன்பாடின்றி போனது. தற்போது மண்டபம் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. அதன் கான்கிரீட் சுவர்கள் பெயர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
அப்பகுதி மக்கள், அந்த கட்டடம் வழியாக ஆற்றுக்கு குளிக்க செல்கின்றனர். மண்டபம் இடிந்து விழுந்தால் விபத்து ஏற்படும் அபாயம் காத்திருக்கிறது. உடனடியாக மண்படத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.