/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாக்கடையில் விழுந்து இறந்த மாணவன் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிதியுதவி

ADDED : அக் 11, 2024 01:07 AM
சாக்கடையில் விழுந்து இறந்த மாணவன்
குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிதியுதவி
அரவக்குறிச்சி, அக். 11-
சாக்கடையில் விழுந்து இறந்த மாணவன் குடும்பத்தினருக்கு, நான்கு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறப்பட்டது.
பள்ளப்பட்டி, ஹபீப் நகரை சேர்ந்தவர் மன்சூர் அலி மற்றும் ரிஸ்வானா பர்வீன். இவர்களது மகன் முகமது உஸ்மான், 12, பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், கழிவுநீர் சாக்கடையில் தவறி விழுந்து, மழை நீரில் சாக்கடைக்குள் அடித்து செல்லப்பட்டு, நங்காஞ்சி ஆற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில், கரூர் மாவட்ட கலெக்டர் தங்க வேல், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ ஆகியோர் நேற்று இறந்த மாணவனின் வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர். மேலும் இறந்த மாணவனுக்காக, நான்கு லட்சம் ரூபாயை அவரது குடும்பத்தினரிடம் நிதியுதவியாக வழங்கினர்.
அப்போது, கலெக்டர், எம்.எல்.ஏ.,வை அப்பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டு, மூடப்படாமல் இருக்கும் கழிவுநீர் கால்வாய்களுக்கு கான்கிரீட் தளம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.