/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு
/
மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு
மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு
மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு
ADDED : மே 24, 2025 02:10 AM
குளித்தலை குளித்தலை, மகா மாரியம்மன் கோவில் திருவிழா, ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 4ல், கம்பம் நடுதல், பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது.
பின்னர் திருத்தேர் வடம் பிடித்தல், பக்தர்கள் குண்டம் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும் சுவாமி வாகனத்தில் திருவீதி உலா வந்தது.
நேற்று இரவு மின் அலங்கார வாகனத்தில், கம்பம் எடுத்து வந்து, முக்கிய வீதிகள் வழியாக பெரியபாலம் பரிசல் துறை காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் நீராடி வழிபட்டனர். மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெற்றது.
மகா மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்க நாளில், மழை பெய்தது போல், நிறைவு நாளான நேற்று துாறல் மழை பெய்தது. ஒவ்வொரு நாளும் இரவு, அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிறைவு நாளில் பக்தர்களுக்கு, வெக்காளியம்மன் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.