/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
102 டிகிரி வெயிலுடன் துவங்கிய 'அக்னி'
/
102 டிகிரி வெயிலுடன் துவங்கிய 'அக்னி'
ADDED : மே 05, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: அக்னி நட்சத்திர வெயில் நேற்று தொடங்கிய நிலையில், சூரிய பகவான் நேற்றும் சதமடித்து, மக்களை வாட்டி வதைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக வெயில் சுட்டெரிக்கிறது. உச்சக்கட்டமாக அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கியது. விடுமுறை தினமான நேற்று, பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கியதால், ஆட்கள் நடமாட்டமின்றி பெரும்பா-லான வீதிகள், சாலைகள் வெறிச்சோடின. மாவட்டத்தில் நேற்று, 39.2 டிகிரி செல்சியஸ் (102.56 டிகிரி பாரன்ஹீட்) வெயில் பதி-வானது. வெயில் கொளுத்தியதால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் அவதிக்கு ஆளாகினர்.