/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொம்மாநாயக்கனுாரில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
பொம்மாநாயக்கனுாரில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பொம்மாநாயக்கனுாரில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பொம்மாநாயக்கனுாரில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஜூன் 06, 2025 01:23 AM
குளித்தலை :குளித்தலைஅடுத்த, கூடலுார்  பஞ்.,  பொம்மா நாயக்கனுார் கிராமம், நாச்ச
கவுண்டனுாரில் அமைந்துள்ள விநாயகர், மாரியம்மன்,  பாம்பாளம்மன்,  காளியம்மன்,  கருப்பசாமி ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள், விழா குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி கோவில் புனரமைக்கப்பட்டு, நேற்று முன்தினம்  காலை குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள், கிராம மக்கள் புனித நீர் எடுத்து வந்தனர். புனிதநீர் அடங்கிய கும்பத்தை யாகசாலையில் வைத்து, சிவாச்சாரியார்கள் இரண்டு கால பூஜை செய்தனர். நேற்று காலை 9:30 மணியளவில் கும்பத்தை சிவாச்சாரியார்கள் மேள தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து,  கோபுர கலசத்திற்கு வேத மந்திரங்கள் ஓதி, புனிதநீரை கலசத்துக்கு ஊற்றி கும்பாபிஷேகம்
செய்தனர்.
தொடர்ந்து  கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் தீபாராதனை காட்டினர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. எம்.எல்.ஏ., மாணிக்கம், தமிழ்நாடு ஊராளி கவுண்டர்  கூட்டமைப்பு மாநில தலைவர் நாகராஜன், விவசாயிகள் மறுவாழ்வு டிரஸ்ட் நிறுவனர்  நாகராஜ்,  யூனியன் குழு தலைவர் சுகந்திசசிகுமார் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள், கிராம மக்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம்
செய்தனர்.
விழாக்குழு சார்பில் அன்னதானம்  வழங்கப்பட்டது.

