/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
/
காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED : மே 29, 2025 01:26 AM
குளித்தலை, குளித்தலை அருகே, காமாட்சி அம்மன் கோவில் கும்பாபி ேஷக விழா விமர்சையாக நடந்தது.
குளித்தலை அடுத்த, ஆலத்துார் பஞ்., ஆதி ஆலத்துாரில் காமாட்சி அம்மன், மீனாட்சி அம்மன், விநாயகர், ஆத்தி மரத்தான், மாசி பெரியண்ணன், காத்தவராயன், தீப்பாஞ்சி அம்மன் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கான கோவில் புதிதாக கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேக விழா நடத்திட கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த, 27ல் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டது. புனிதநீர் அடங்கிய கும்பத்தை, சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை செய்தனர்.
நேற்று காலை இரண்டாம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும், புனிதநீர் கும்பத்தை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க, ஊர்வலமாக கொண்டு வந்து வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கானோர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

