/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிவசக்தி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
/
சிவசக்தி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
சிவசக்தி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
சிவசக்தி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED : ஜன 13, 2025 03:11 AM
குளித்தலை,: குளித்தலை அடுத்த கார்ணம்பட்டி ராஜீவ் நகரில், கிராம மக்கள் சார்பில் சிவசக்தி செல்வ விநாயகர் கோவில் புதிதாக கட்டி முடிக்-கப்பட்டது.
இதையடுத்து, மஹா கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் காலை, குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்தனர். பின், யாக சாலையில் புனித நீர் அடங்கிய கும்-பத்தை வைத்து, இரண்டு காலவேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று, கோபுர கலசம் வைக்கப்பட்டு, வேத மந்தி-ரங்கள் முழங்க கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, சிவாச்சாரியார்கள் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.கும்பாபிஷேக விழாவில் திரைப்பட நடிகர் கஞ்சா கருப்பு உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், விவசாய அமைப்பு தலைவர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநி-திகள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்-பட்டது.