/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை துவக்கம்
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை துவக்கம்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை துவக்கம்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை துவக்கம்
ADDED : மே 10, 2025 12:57 AM
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், குருப்பெயர்ச்சி விழாவையொட்டி, லட்சார்ச்சனை நேற்று தொடங்கியது.
நவக்கிரகங்களில் முக்கிய கிரகமான குரு பகவான், ஆண்டுக்கு ஒருமுறை ராசி விட்டு மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். நாளை மதியம், 1:19 மணிக்கு குரு பகவான், ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். அதையொட்டி, நேற்று கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நவக்கிரக மூர்த்திகளுக்கும், குரு பகவானுக்கும் விநாயகர் வழிபாடு, மஹா சங்கல்பம், லட்சார்ச்சனை நடந்தது. பின், தீபாராதனை காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, குரு பகவானை வழிபட்டனர்.