ADDED : ஜூன் 27, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, தளிஞ்சி பஞ்., ரங்காச்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30, கார் டிரைவர். கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., கோவக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் துளசிமணி, 19. இவர், புதுக்கோட்டையில் உள்ள வேளாண் கல்லுாரியில் பி.எஸ்.சி., அக்ரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 15ம் தேதி இருவருக்கும் திருமணம் நடை
பெற்றது.
இந்நிலையில் கடந்த, 20ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த துளசிமணியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை.
தன் மனைவியை காணவில்லை என, சதீஷ்குமார் கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.