ADDED : செப் 29, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:குளித்தலை அடுத்த கடவூர் வணக்காப்பாளர் மோகன ஈஸ்வரி, நேற்று முன்தினம் மாலை, ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, நடுப்பட்டி கன்னிமார் கோவில் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில், 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் துாக்கிட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதி இடையப்பட்டி வி.ஏ.ஓ., சிவக்குமார், 37, கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், டி.இடையப்பட்டியை சேர்ந்த காளியப்பன், 75, என்பது தெரியவந்தது.