/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மண்ணெண்ணெய் குண்டு வீசியவருக்கு மாவுக்கட்டு
/
மண்ணெண்ணெய் குண்டு வீசியவருக்கு மாவுக்கட்டு
ADDED : ஜன 19, 2025 11:30 PM

கரூர் : கரூர், தான்தோன்றிமலை, கங்கா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி, 53; மளிகை கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி, 21, சிகரெட் கேட்டுள்ளார்.
சிகரெட் விற்பதில்லை என்று சுப்பிரமணி கூறியதால், மது பாட்டிலில் மண்ணெண்ணெயை நிரப்பி தீ வைத்து, கடைக்குள் வீசி ஓட்டம் பிடித்தார். கடையில் இருந்த தண்ணீர் கேன் உள்ளிட்ட பொருட்கள் எரிந்தன.
தான்தோன்றிமலை போலீசார், முகமது அன்சாரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். கொளந்தாகவுண்டனுாரில் பதுங்கியிருந்தவரை நேற்று அதிகாலை கைது செய்தனர்.
அப்போது தப்பி ஓட முயன்று தவறி விழுந்ததில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கரூர் அரசு மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டது.