/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை ரயில்வே மேம்பால பணி காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்

ADDED : பிப் 23, 2024 02:43 AM
குளித்தலை:குளித்தலை நகராட்சி, 3 வது வார்டு பகுதியில் குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் உள்ளது.
இக்கேட்டை கடந்து தான் தோகைமலை, மணப்பாறை,துவரங்குறிச்சி, பொன்னமராவதி, திண்டுக்கல், மதுரை, பாளையம், தரகம்பட்டி, கடவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. ரயில்டே கேட் போடும் போது, ஒவ்வொரு முறையும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும். பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் மத்திய, மாநில அரசுக்கு இப்பகுதியில் மேம்பாலம் கட்ட கோரிக்கை விடுத்து வந்தனர். வரும் 26ல் பிரதமர் மோடி காணொளி வாயிலாக மேம்பாலம் கட்டும் பணிக்காக அடிக்கல் நாட்டுகிறார்.குளித்தலை நகர பா.ஜ., தலைவர் கணேசன் வெளியிட்ட அறிக்கை: குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் பணிக்காக வரும், 26 காலை 11.00 மணிக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.குளித்தலையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில மகளிரணி துணைத்தலைவர் மீனா மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொள்கின்றனர். இவ்வாறு கூறியுள்ளார்.