/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாஜி அமைச்சர் உதயகுமாரை கைது செய்யகோரி உரிமை மீட்புக்குழு புகார்
/
மாஜி அமைச்சர் உதயகுமாரை கைது செய்யகோரி உரிமை மீட்புக்குழு புகார்
மாஜி அமைச்சர் உதயகுமாரை கைது செய்யகோரி உரிமை மீட்புக்குழு புகார்
மாஜி அமைச்சர் உதயகுமாரை கைது செய்யகோரி உரிமை மீட்புக்குழு புகார்
ADDED : அக் 29, 2024 07:06 AM
கரூர்: தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் மீது, கைது நடவடிக்கை கோரி, கரூர் மாவட்ட அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட, நிர்வாகிகள் நேற்று, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
அதில் கூறியுள்ளதாவது:மதுரை மாவட்டம், கே.கே., நகரில் கடந்த, 24 ல் முன்னாள் அமைச்சர் உதயகுமார், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் குறித்து, அவதுாறாக பேசியுள்ளார். மேலும், முன்னாள் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டால்,
பன்னீர் செல்வம் வெளியே வர முடியாதபடி செய்து விடுவோம் என பேசியுள்ளார். எனவே, முன்னாள் அமைச்சர் உதயகுமார் மீது, இந்திய தண்டனை சட்டம், 196 ன் படி, கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். மாநில பாசறை செயலாளர் லோகநாதன், பேரவை துணை செயலாளர் கணேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.