/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில்
/
கரூரில் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில்
ADDED : ஏப் 20, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:
தமிழகத்தின் மைய பகுதியாக விளங்கும் கரூர், தொழில் நகரத்தில் பிப்., மார்ச் மாதத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது.
கடந்த, பிப்., மாதம் முதல், 38 செல்சியஸ் மேல்(100 டிகிரி பாரன்ஹீட்) வெயில் பாதிவாகி வந்தது. கடந்த வாரம் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்தது. அப்போது, 38 செல்சியஸ் கீழ் வெப்பம் பதிவாகி இருந்தது. தற்போது மீண்டும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது.
நேற்று முன்தினம் 37.2 செல்சியஸ்(98.96 டிகிரி பாரன்ஹீட்), நேற்று 38.5 (101.3 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகி உள்ளது. வெயில் சதம் அடித்து வருவதால் மக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர்.

