sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நிழற்கூடத்தை சீரமைக்கணும்

/

நிழற்கூடத்தை சீரமைக்கணும்

நிழற்கூடத்தை சீரமைக்கணும்

நிழற்கூடத்தை சீரமைக்கணும்


ADDED : ஜூலை 02, 2024 07:46 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தான்தோன்றிமலை: தோரணகல்பட்டி அருகே சாரதா நகர் பஸ் ஸ்டாப் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், இங்கு பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் கட்டப்-பட்டது. தற்போது, பழுதடைந்த நிலையில் உள்-ளது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அதை சீரமைக்க கோரி, பல முறை புகார் செய்தும், அதி-காரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால், பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே நிழற் கூடத்தை சீரமைக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

கரூர், ஜூலை 2-

கரூர் அருகே உள்ள திருமாநிலையூர் வழியாக திருச்சி உள்ளிட்ட, பல மாவட்டங்களுக்கு ஏராள-மான வாகனங்கள் செல்கிறது. அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், எளிதாக செல்ல முடியவில்லை. விபத்துகளை தவிர்க்கும் வகையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகா-ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

37 ஆயிரத்து, 946 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

கரூர், க.பரமத்தி விவசாயிகள், நொய்யல் அருகில் உள்ள சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கள்தோறும் நடை-பெறும் ஏலத்துக்கு விளை பொருட்களை கொண்டு செல்கின்றனர். நேற்று, 9,987 தேங்காய்-களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 18.49 ரூபாய், அதிகபட்-சமாக, 32.89, சராசரியாக, 27.69க்கு ஏலம் போனது. மொத்தம், 3,516 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 90 ஆயிரத்து, 851 ரூபாய்க்கு விற்பனையானது.

கொப்பரை தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 93.89, அதிகபட்சமாக, 96.29, சராசரியாக, 95.99, இரண்டாம் தரம் குறைந்தபட்-சமாக, 62.79, அதிகபட்சமாக, 92.60, சராசரியாக, 84.39 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 23,423 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 19 லட்-சத்து, 82 ஆயிரத்து, 807 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. எள் கருப்பு ரகம் ஒரு கிலோ அதி-கபட்சமாக, 140.99 ரூபாய், சராசரியாக, 128, சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 93.89, அதிகபட்சமாக, 136.59, சராசரியாக, 126.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 4,736 கிலோ எடையுள்ள எள், 5 லட்சத்து 64 ஆயிரத்து, 288 ரூபாய்க்கு விற்பனையானது.

மொத்தமாக தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 26 லட்சத்து, 37 ஆயிரத்து, 946 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது






      Dinamalar
      Follow us