/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிந்தலவாடி வாய்க்காலில் படித்துறை சேதத்தால் அவதி
/
சிந்தலவாடி வாய்க்காலில் படித்துறை சேதத்தால் அவதி
ADDED : பிப் 03, 2025 08:59 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி அருகே, கட்டளை தென்கரை வாய்க்கால் உள்ளது. இதில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, படித்துறை கட்-டப்பட்டுள்ளது. மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து பெட்டவாய்த்தலை வரை, கட்டளை தென்கரை வாய்க்கால் செல்கிறது. இதில், சிந்த-லவாடி பகுதியை சேர்ந்த மக்கள், குளித்தும், துணிகளை துவைத்தும் வருகின்றனர்.
ஒரு பகுதியில் உள்ள வாய்க்கால் படித்துறை படிகள், சிதிலமடைந்து பயன்படுத்த சிரமமாக உள்ளது. இதனால் மக்கள் வாய்க்காலில் நின்று குளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த வாய்க்கால் படித்துறையை சீரமைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

