/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுபாலம் இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் அவஸ்தை
/
சிறுபாலம் இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் அவஸ்தை
சிறுபாலம் இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் அவஸ்தை
சிறுபாலம் இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் அவஸ்தை
ADDED : பிப் 17, 2025 03:12 AM
கரூர்: கரூர் - ஈரோடு சாலை, கோவிந்தம்பாளையம் பிரிவில், சாலையின் குறுக்கே சில மாதங்களுக்கு முன் சிறுபாலம் கட்டப்-பட்டுள்ளது. அப்போது, கான்கிரீட் அமைக்க போடப்பட்ட இரும்பு கம்பிகள், வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இணைப்பு சாலையில் போடப்பட்ட தரமற்ற சிமென்ட் ஜல்லிக்-கற்கள், சமீபத்தில் பெய்த மழையால் சிதறி கிடக்கின்றன.
அந்த சாலை வழியாக, ஏராளமான வாகனங்கள் சென்று வரு-கின்றன. அப்போது, நீட்டிய நிலையில் உள்ள, இரும்பு கம்பி-களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கரூர் - ஈரோடு சாலை கோவிந்தம்பாளையம் பிரிவில், சாலையின் குறுக்கே உள்ள, சிறு பாலத்தில், சிதறி உள்ள சிமென்ட் ஜல்லிக்-கற்களை சீரமைக்க, ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.