/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வழி தவறிய மானை மக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு
/
வழி தவறிய மானை மக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு
வழி தவறிய மானை மக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு
வழி தவறிய மானை மக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு
ADDED : மே 10, 2024 07:26 AM
குளித்தலை : குளித்தலை, நெய்தலுாரில் இரை தேடி வழி தவறி வந்து நாய்களிடம் கடிபட்ட, ஆண் புள்ளி மான் மீட்கப்பட்டது.
குளித்தலை அடுத்த நெய்தலுாரில் நேற்று காலை 10:30 மணியளவில் கட்டளை மேட்டுவாய்க்கால் கரையில், இரை தேடி வழி தவறி வந்த புள்ளிமான் ஒன்றை நாய்கள் துரத்தி கடித்துள்ளது. காயத்துடன் சுற்றித்திரிந்த மானை, அப்பகுதி மக்கள் மீட்க சென்ற போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் புகுந்தது.பின்னர் மானை மக்கள் மீட்டு, நான்கு கால்களையும் கட்டி பாதுகாத்தனர். இதுகுறித்து கரூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நெய்தலுார் உதவி கால்நடை மருத்துவர் ரமேஷ், புள்ளி மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.குளித்தலை வனபாதுகாவலர் சிவரஞ்சனி கூறுகையில்,''மூன்று வயதான ஆண் புள்ளி மான், கடவூரில் உள்ள வனப்பகுதியில் விடப்படும். வடசேரி பஞ்., பகுதியில் அரசு பொது பணித்துறைக்கு சொந்தமான பெரியகுளத்தில், 50க்கும் மேற்பட்ட மான்கள் இருப்பதாகவும், போதிய உணவு இல்லாததால், இந்த மான் இரைதேடி வந்திருக்கலாம்,'' என்றார்.