/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருவள்ளுவர் சிலையை திறந்த மாணவி: கண்கலங்கி நெகிழ்ச்சி
/
திருவள்ளுவர் சிலையை திறந்த மாணவி: கண்கலங்கி நெகிழ்ச்சி
திருவள்ளுவர் சிலையை திறந்த மாணவி: கண்கலங்கி நெகிழ்ச்சி
திருவள்ளுவர் சிலையை திறந்த மாணவி: கண்கலங்கி நெகிழ்ச்சி
ADDED : ஜூலை 26, 2025 01:23 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை, தொ.ஜேடர்பாளையம் அரசுப்பள்ளி, கடந்த, 1951ல் தொடங்கப்பட்டது. தற்போது, 75 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், பவள விழா கொண்டாட பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, நேற்று காலை, 9:00 மணிக்கு திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. ஜேபி உடையார் குரூப் ஆப் கம்பெனியின் சேர்மன் ஜெயசீலன் தலைமை வகித்தார். இப்பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி தியாகச்சுடர், இவர், 1,330 திருக்குறள்களையும் ஒப்புவித்ததால், தமிழக பள்ளிக் கல்வித்துறை, 'குறளரசி' என்ற பட்டத்தை வழங்கியிருந்தது.
இதனால், சிலையை, மாணவியை வைத்து திறக்க ஏற்பாடு செய்திருந்தனர். சிலையை மாணவி திறந்து வைக்கும்போது, மாணவ, மாணவியர் திருக்குறளை பாடினர். இதனால், மாணவி தியாகச்சுடர் கண்கலங்கினார். இதை பார்த்த தலைமை ஆசிரியை ஜோதிக்கண்மணி மற்றும் பொதுமக்கள், நெகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள், இதேப்பள்ளியில் படித்து பெரிய பொறுப்புகளில் உள்ள முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் மணி, சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.