/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இளம்பெண் மாயம் தந்தை போலீசில் புகார்
/
இளம்பெண் மாயம் தந்தை போலீசில் புகார்
ADDED : மார் 25, 2024 01:32 AM
கரூர்:கரூர்
அருகே, வடிவேல் நகர் ஆண்டாங்கோவில் புதுார் பகுதியை சேர்ந்த சேகர்
மகள் அபிராமி, 21. இவர் கடந்த, 21ல் மதியம் வீட்டில் இருந்து வெளியே
சென்றுள்ளார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து,
அபிராமியின் தந்தை சேகர் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார்
வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
* கரூர் வடக்கு காந்தி கிராமம்
பகுதியை சேர்ந்த, பெரியசாமி மகன் சங்கர் கவின், 15; வெண்ணைமலையில்
உள்ள, தனியார் பள்ளியில், 10 ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 23ல்
வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்ற, சங்கர் கவின் வீடு
திரும்பவில்லை. இதுகுறித்து, தந்தை பெரியசாமி கொடுத்த புகார்படி,
பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

