/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருச்சி-, கரூர் தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும்
/
திருச்சி-, கரூர் தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும்
திருச்சி-, கரூர் தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும்
திருச்சி-, கரூர் தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும்
ADDED : அக் 16, 2024 01:04 AM
கரூர், அக். 16-
திருச்சி-, கரூர் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த, 2008ல், கரூர்-- திருச்சி இடையே, 82 கி.மீ., துாரம், 516 கோடி ரூபாய் செலவில் தேசிய நெடுஞ்சாலை பணி நடந்தது. இதில் மணவாசி முதல் கரூர் வரை, 22 கி.மீ., நான்கு வழி சாலையாகவும், மற்ற பகுதி இருவழி சாலையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, திருச்சி மாவட்டம் திருப்பராய்துறையில் இருந்து கரூர் வரை உள்ள, 63 கி.மீ., சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டு திறந்துவிட்டதால், கரூர் மாவட்டம் மணவாசி, திருச்சி மாவட்டம் திருப்பராய்துறை ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையை, நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கரூரில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள், திருப்பராய்துறை அருகிலிருந்து புறவழிச்சாலை அமைப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற வழக்கு போன்றவையால் பணி முற்று பெறாமல் இருக்கிறது. கரூரிலிருந்து, திருச்சி நகருக்குள் கனரக வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மேலும் மணவாசியில் இருந்து திருப்பராய்துறை வரை, 41 கி.மீ., இரண்டு வழி சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வழியாக, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ், லாரிகள் உட்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன. எனவே, 41 கி.மீ., சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.