ADDED : நவ 28, 2024 01:13 AM
லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
அந்தியூர், நவ. 28-
அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி, சுண்டப்பூர் பிரிவு, நடைபாதை அருகே லாரி ஒன்று, சாலையோர வனப்பகுதியில் நேற்று காலை, 11:30 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாக, பர்கூர் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் போலீசார், பொதுமக்கள் உதவியுடன், கவிழ்ந்து கிடந்த லாரியின் இடிபாடு
களில் சிக்கியிருந்த டிரைவரை, மீட்கும் போது அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கர்நாடகா மாநிலம், தலக்காடு பகுதியை சேர்ந்த இலியம்பாஷா, 36, என்பதும், துாத்துக்குடியிலிருந்து கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடுவிற்கு ஜிப்சம் பவுடரை ஏற்றிக்கொண்டு, அந்தியூர் வழியாக பர்கூர் சாலையில் தாளக்கரை அடுத்த சுண்டப்பூர் பிரிவு நடைபாதை அருகில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து இறந்தது தெரியவந்தது. பர்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.