/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டிராக்டர் திடீரென திரும்பியதால் டூவீலரில் சென்றவர் உயிரிழப்பு
/
டிராக்டர் திடீரென திரும்பியதால் டூவீலரில் சென்றவர் உயிரிழப்பு
டிராக்டர் திடீரென திரும்பியதால் டூவீலரில் சென்றவர் உயிரிழப்பு
டிராக்டர் திடீரென திரும்பியதால் டூவீலரில் சென்றவர் உயிரிழப்பு
ADDED : மே 29, 2024 07:22 AM
அரவக்குறிச்சி : சீத்தப்பட்டிகாலனியில், முன்னாள் சென்ற டிராக்டர் திடீரென வலது புறம் திரும்பியதால், டூவீலரில் சென்றவர் டிராக்டரில் மோதி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் அருகே ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாதன், 38. இவர், நேற்று முன்தினம் மதியம் கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சீதப்பட்டி காலனி அருகே சென்ற போது, இவருக்கு முன்பாக சீத்தப்பட்டிகாலனியை சேர்ந்த சின்னசாமி, 40, என்பவர் ஓட்டிச்சென்ற டிராக்டர் எவ்வித சிக்னலையும் காட்டாமல், திடீரென வலது புறம் திரும்பியது.இதனால் பின்னால் டூவீலரில் வந்த கோபிநாதன், டிராக்டரின் பின்னால் மோதியது.இதில் படுகாயம் அடைந்த கோபிநாதனை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று உயிரிழந்தார்.கோபிநாதன் மனைவி விஜி, 35, அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் டிராக்டர் டிரைவர் சின்னசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.