/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெ.ஆ., கோவில் தடுப்பணை தண்ணீர் வரத்து நேற்று நின்றது
/
பெ.ஆ., கோவில் தடுப்பணை தண்ணீர் வரத்து நேற்று நின்றது
பெ.ஆ., கோவில் தடுப்பணை தண்ணீர் வரத்து நேற்று நின்றது
பெ.ஆ., கோவில் தடுப்பணை தண்ணீர் வரத்து நேற்று நின்றது
ADDED : அக் 30, 2025 02:21 AM
கரூர் 13கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று நின்றது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 325 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், மழை காரணமாக கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு அதிகப்பட்சமாக, 686 கன அடி வரை தண்ணீர் வந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக, அமராவதி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை. இதனால், கரூர் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, நேற்று காலை தண்ணீர் வரத்து நின்றது.
* மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 27 ஆயிரத்து, 134 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6.00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 9,959 கன அடியாக, தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதிக்கு சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 4,509 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீரும் திறக்கப்
பட்டுள்ளது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 10 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 21.91 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

