/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழுத்து வெட்டப்பட்டு தொழிலாளி கொலை
/
கழுத்து வெட்டப்பட்டு தொழிலாளி கொலை
ADDED : நவ 03, 2024 12:54 AM
பாலக்கோடு, நவ. 3-
பாலக்கோடு அருகே, மாந்தோப்பில் கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த, பிக்கனஹள்ளியிலுள்ள மாந்தோப்பில், நேற்று முன்தினம் நள்ளிரவு கழுத்தில் வெட்டு காயத்துடன், ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மகேந்திரமங்கலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த சமத்துவபுரத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி வேலவன், 37, என தெரியவந்தது. இவருக்கு, சுகன்யா என்ற மனைவியும் மற்றும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
தீபாவளிக்கு பிக்கனஹள்ளியிலுள்ள தாய் வீட்டிற்கு சுகன்யா சென்றிருந்தார். வேலவனும் நேற்று முன்தினம் இரவு பிக்கனஹள்ளி சென்று, அங்கு நடந்த நடன நிகழ்ச்சியை காண மனைவி, குழந்தைகளுடன் சென்றார்.
பின் சிறிது நேரத்தில் வருவதாக கூறிவிட்டு சென்றவர், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இந்நிலையில் அருகிலுள்ள, மாந்தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்