/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரும் 23ல் தேமல் கண்டறியும் முகாம்
/
வரும் 23ல் தேமல் கண்டறியும் முகாம்
ADDED : ஆக 19, 2025 01:16 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, இனுங்கூர் மேம்படுத்தப்பட்ட வட்டார மருத்துவர் அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும், தேமல் கண்டறியும் முகாம் நடைபெற்று வருகிறது. குளித்தலை அடுத்த இனுங்கூர் பகுதியில் வரும் 23ல் தங்களின் வீட்டிற்கே வந்து தேமல் உள்ளவர்களை கண்டறியும் பணி நடைபெறுகிறது. எனவே, அக்குழுவினர் தங்கள் இல்லம் வரும்போது, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, தங்களுக்கு தேமல் இருந்தாலும் அல்லது தோளில் உணர்ச்சியற்று இருந்தாலோ, சுகாதார ஆய்வாளர்கள் சேகரை-63793 31093, மவுனேஸ் வரனை, 96590 12310, மோகன்ராஜை, 63742 25011, ஹரிஷ் குமாரை-70109 72949 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.