/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை அரசு மருத்துவமனையில் 'எக்கோ' பரிசோதனை மையம் தேவை
/
குளித்தலை அரசு மருத்துவமனையில் 'எக்கோ' பரிசோதனை மையம் தேவை
குளித்தலை அரசு மருத்துவமனையில் 'எக்கோ' பரிசோதனை மையம் தேவை
குளித்தலை அரசு மருத்துவமனையில் 'எக்கோ' பரிசோதனை மையம் தேவை
ADDED : ஜன 03, 2024 12:39 PM
குளித்தலை: குளித்தலை அரசு மருத்துவமனையில், 'எக்கோ' பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை அரசு மருத்துவமனையில், 250க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும், அதிகளவு பிரசவம் நடக்கிறது. இதுபோன்ற சமயங்களில், கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுவின் இதய துடிப்பு மற்றும் கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகளின் மூச்சுத்திணறல் அளவை பரிசோதனை செய்ய, 'எக்கோ' பரிசோதனை முக்கியத்துவமாக கருதப்படுகிறது.ஆனால், 'எக்கோ' பரிசோதனை மைய வசதி இல்லாததால், ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பொது மக்கள், தனியார், 'எக்கோ' பரிசோதனை மையத்தில், பணம் செலவு செய்து, பரிசோதனை செய்யவேண்டிய நிலை உள்ளது
எனவே, மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி, குளித்தலை அரசு மருத்துவமனையில், 'எக்கோ' பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.