/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுபாலம் அமைத்த இடத்தில் தார்ச்சாலை இல்லை: வாகன ஓட்டிகள் பெரும் அவதி

ADDED : மே 30, 2024 01:11 AM
கரூர், கரூர் அருகே, சிறுபாலம் அமைக்கப்பட்ட இடத்தில், இணைப்பு தார்ச்சாலை அமைக்கப் படாததால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்
படுகின்றனர்.
கரூர் மாநகராட்சி, வெங்கமேடு அருகே அருகம்பாளையம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலையின், குறுக்கே இணைப்பு சாலை அமைக்கும் பணி நடக்கிறது. அதன்படி, கரூர் அருகே அருகம்பாளையத்தில், கடந்த மாதம் சாலையின் குறுக்கே, சிறு பாலம் அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, சிறுபாலத்தின் இரண்டு பக்கங்களில், இணைப்பு தார்ச்சாலை அமைக்க ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், தார்ச் சாலை அமைக்கப்
படவில்லை.
இதனால், அந்த இடத்தில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. இரவு நேரத்தில், டூவீலர்களில் செல்கிறவர்கள் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.
அருகம்பாளையத்தில் சிறுபாலம் அமைக்கப்பட்ட இடத்தில், இணைப்பு தார்ச் சாலை அமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.