/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தெரஸா கார்னர் பகுதியில் --சாக்கடை அடைப்பால் அவதி
/
தெரஸா கார்னர் பகுதியில் --சாக்கடை அடைப்பால் அவதி
ADDED : பிப் 23, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்;கரூர், தெரஸா கார்னர் பகுதியில், சாக்கடை கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் அடைப்பு உள்ளது.
கால்வாயில் செடி, கொடிகள் ஏராளமாக வளர்ந்து உள்ளதால், கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கும் போது மட்டும், கால்வாயில் இருந்த மணலை, துப்புரவு ஊழியர்கள் எடுத்து, சாலையில் கொட்டி விட்டு செல்கின்றனர். அதன்பின், தொடர் பராமரிப்பு இல்லாததால், மீண்டும் மணல் சாக்கடையில் விழுந்து அடைப்பு ஏற்படுகிறது. கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியினர் அவதிக்குள்ளாகின்றனர்.