/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருக்குறள் பேரவை 39ம் ஆண்டு விழா சிறந்த புத்தகங்களுக்கு பரிசு வழங்கல்
/
திருக்குறள் பேரவை 39ம் ஆண்டு விழா சிறந்த புத்தகங்களுக்கு பரிசு வழங்கல்
திருக்குறள் பேரவை 39ம் ஆண்டு விழா சிறந்த புத்தகங்களுக்கு பரிசு வழங்கல்
திருக்குறள் பேரவை 39ம் ஆண்டு விழா சிறந்த புத்தகங்களுக்கு பரிசு வழங்கல்
ADDED : ஜன 27, 2025 03:01 AM
கரூர்: கரூரில் நடந்த திருக்குறள் பேரவையின், 39ம் ஆண்டு விழாவில், மதுரை மூத்த பத்திரிகையாளர் எழுதிய நுாலுக்கு, முதல் பரிசு வழங்கப்பட்டது.
கரூர் நகரத்தார் சங்க மண்டபத்தில், திருக்குறள் பேரவையின், 39ம் ஆண்டு விழா மற்றும் குன்றக்குடி அடிகளாரின் நுாற்றாண்டு விழா நடந்தது. இதில், பேரவை செயலாளர் மேலை பழனி-யப்பன் தொடங்கி வைத்து பேசியதாவது: ஆன்மிக போராட்டம் மற்றும் சமுதாய ஒற்றுமையில், குன்றக்குடி அடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியது. திருக்குறளை உலகெங்கும் பரப்பியவர்; உன்னதமான மாமனிதர் ஆவார். நம்முடைய வாழ்க்கை வசப்-படும் வகையில், அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கிய உயிர் ஓவியம் திருக்குறள் ஆகும். திருக்குறளை மக்களுடைய வாழ்வியல் ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான், இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு திருக்குறளை கொண்டு சேர்க்கும் வகையில், மாணவ, மாணவிய-ருக்கு போட்டி நடத்தப்படுகிறது. சிறந்த நுால்களுக்கும் பரிசு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.பின், சிறந்த நுால் போட்டி யில், மூத்த பத்திரிகையாளர் மதுரை திருமலை எழுதிய, 'நமக்கு எதற்கு வம்பு' என்ற நுாலுக்கு முதல் பரிசு; புதுச்சேரி தமிழ் பேராசிரியர் கிருங்கை சேதுபதியின், 'என்றும் வாழ்கிறார்கள்' என்ற கவிதை நுாலுக்கு, 2ம் பரிசு; சென்னை புனிதவதி எழுதிய, 'தாமரை நெஞ்சம்' என்ற நாவ-லுக்கும், கடவூர் மணிமாறன் எழுதிய, 'தமிழர் பரணி' என்ற நுாலுக்கும், 3ம் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, -கல்லுாரி மாணவ, மாண-வியர், 40 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது. தொழிலதிபர் ரவி வீரப்பன், ஆதப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

