/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருக்குறள் திருப்பணிகள் திட்டம் ஆக.,18 முதல் பயிற்சி வகுப்பு
/
திருக்குறள் திருப்பணிகள் திட்டம் ஆக.,18 முதல் பயிற்சி வகுப்பு
திருக்குறள் திருப்பணிகள் திட்டம் ஆக.,18 முதல் பயிற்சி வகுப்பு
திருக்குறள் திருப்பணிகள் திட்டம் ஆக.,18 முதல் பயிற்சி வகுப்பு
ADDED : ஆக 15, 2025 02:35 AM
கரூர், திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கீழ், பயிற்சி வகுப்பு வரும், 18 முதல் தொடங்கும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் சார்பில், திருக்குறள் திருப்பணிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், கலெக்டரை தலைவராக கொண்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தமிழ்ச்செம்மல் விருதாளர்கள் உள்பட பலர் உள்ளடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் செங்குந்தபுரம் மார்னிங் ஸ்டார் பள்ளி, குளித்தலை கிராமிய அரங்கம், பள்ளப்பட்டி மேனிலைப்பள்ளி ஆகிய மூன்று இடங்களில் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள், திருக்குறளில் ஆர்வமுள்ள தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் தொடக்கவிழா, தான்தோன்றி மலை அரசு கலைக்கல்லுாரியில் வரும், 18ல் நடக்கிறது. தொடர்ந்து, வாரந்தோறும் சனிக்
கிழமை காலை, 10:00 முதல், 12:00 வரை, 30 வாரங்களுக்கு நடக்கிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.