/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தெற்கு காந்திகிராமம் பூங்காவில் திருவள்ளுவர் சிலை சேதம்
/
தெற்கு காந்திகிராமம் பூங்காவில் திருவள்ளுவர் சிலை சேதம்
தெற்கு காந்திகிராமம் பூங்காவில் திருவள்ளுவர் சிலை சேதம்
தெற்கு காந்திகிராமம் பூங்காவில் திருவள்ளுவர் சிலை சேதம்
ADDED : டிச 27, 2024 01:07 AM
கரூர், டிச. 27-
திருவள்ளுவர் தினம் நெருங்கி வரும் நிலையில், கரூர் அருகே பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலை சேதமடைந்து இருப்பதால், சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர், தான்தோன்றிமலை நகராட்சியாக
இருந்தபோது, தெற்கு காந்தி கிராமத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், கரூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கடந்த, 2008ல் பூங்கா வசதி ஏற்படுத்தப்பட்டது. தான்தோன்றிமலை நகராட்சி, கரூர் நகராட்சியுடன் கடந்த, 2011ம் ஆண்டு இணைக்கப்பட்டது. பூங்காவில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்ற கோரிகை எழுந்தவுடன், அ.தி.மு.க., ஆட்சியில் சிலை சீரமைக்கப்பட்டது.
அதில், சிலைக்கு வர்ணம் பூசப்பட்டு, கூண்டு அமைத்து கதவு அமைக்கப்பட்டது. தற்போது, கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்பின், கரூர் மாநகராட்சி நிர்வாகம், காந்தி கிராமத்தில் உள்ள பூங்காவை சீரமைக்கவில்லை. தற்போது திருவள்ளுவர் சிலை மீண்டும் சேதமடைந்துள்ளது. அதில், சில இடங்களில் சிமென்ட் பெயர்ந்து, பொலிவிழந்து காணப்படுகிறது. ஜன., 15ல் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்குள் சிலையை பராமரிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

