ADDED : ஜூன் 04, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு, ஏராளமானோர் பல்வேறு பணிகளுக்காக வருகின்றனர். கலெக்டர் அலுவலக நுழைவாயில், குறைகேட்பு கூட்ட அரங்க பகுதியில், நாய்கள் முகாமிட்டுள்ளன. மேலும், எஸ்.பி., அலுவலக வளாகத்திலும் சுற்றித்திரிகின்றன. இதனால் மனு கொடுக்க வரும் மக்கள் அச்சப்படுகின்றனர்.
பொது மக்கள், பணியாளர்கள் வந்து செல்லும் கலெக்டர் அலுவலக வளாகத்தில், சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.