/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டர் சட்டத்தில் கைது செய்வதாக மிரட்டல்? போலீசார் மீது பெண் புகார்
/
குண்டர் சட்டத்தில் கைது செய்வதாக மிரட்டல்? போலீசார் மீது பெண் புகார்
குண்டர் சட்டத்தில் கைது செய்வதாக மிரட்டல்? போலீசார் மீது பெண் புகார்
குண்டர் சட்டத்தில் கைது செய்வதாக மிரட்டல்? போலீசார் மீது பெண் புகார்
ADDED : நவ 18, 2024 03:37 AM
கரூர்: 'அ.தி.மு.க.,வை சேர்ந்த நிர்வாகி மீது குண்டர் சட்டம் போடுவோம்' என, போலீசார் மிரட்டுவதாக, அவரது மனைவி, கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று புகார் மனு கொடுத்தார்.
கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, அ.தி.மு.க., துணை செயலாளராக இருப்பவர் செல்வராஜ், 55; இவர், மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி கடந்த, 9ல் வாங்கல் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்-ளனர். இந்நிலையில், செல்வராஜின் மனைவி சம்பூர்ணம், 49, என்பவர், நேற்று கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கணவர் செல்வராஜ்; இவர் மீது வேலாயுதம்-பாளையம், வாங்கல் போலீசார், பல பொய் வழக்குகளை போட்-டுள்ளனர். காவிரியாற்று பகுதிகளில், மணல் கடத்துவது தொடர்-பாக என் கணவர் செல்வராஜ், தொடர்ந்து, கலெக்டர் அலுவல-கத்தில் புகார் அளித்தது தான் காரணம்.
தற்போது, மணல் கடத்தியதாக பொய்யான வழக்கை, வாங்கல் போலீசார் பதிவு செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்-ளனர். மேலும், என் கணவர் செல்வராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ், கைது செய்வதாக கூறி, எங்கள் குடும்பத்தை போலீசார் மிரட்டுகின்றனர். இதனால், எங்களது குடும்பத்துக்கு உரிய பாது-காப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.