/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மூன்று பேர் கைது
/
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மூன்று பேர் கைது
ADDED : நவ 02, 2024 01:23 AM
குளித்தலை, நவ. 2-
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை அடுத்த, தோகைமலை - திருச்சி நெடுஞசாலையில் வெள்ளைப்பட்டி களத்து வீடு பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்க்கில் ஊழியராக இன்பரசு பணியில் இருந்து வந்தார். கடந்த, 30 இரவு பணியில் இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் மற்றும் மூன்று பேர் பைக்கில் பெட்ரோல் பங்க்கிற்கு வந்து, தீபாவளி திருநாளை ஒட்டி போனசாக எங்களுக்கு மாமுல் வழங்க வேண்டும் என்றனர்.
நான் உரிமையாளர் இல்லை என்று சொன்ன இன்பரசு, போனில் உரிமையாளரிடம் பேசினார். இதையடுத்து, 500 ரூபாய் வழங்கினார். தான் வழங்கிய பணத்துக்கு ரசீதில் கையெழுத்திட வேண்டும் என, அவர்களிடம் இன்பரசு கூறினார். நான்கு பேரும் கையெழுத்து போட முடியாது எனக்கூறி, சரமாரியாக இன்பரசை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
பங்க் உரிமையாளர் கண்ணன், அங்கிருந்த 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து, தோகைமலை போலீசில் புகார் அளித்தார். தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் விசாரித்து, சவுந்தரராஜன், 47, வசந்த், 35, முகின், 25, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.