/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தனியார் 'டிவி' நிருபர் மீது தாக்குதல் 3 பேர் கைது; ஒருவர் தலைமறைவு
/
தனியார் 'டிவி' நிருபர் மீது தாக்குதல் 3 பேர் கைது; ஒருவர் தலைமறைவு
தனியார் 'டிவி' நிருபர் மீது தாக்குதல் 3 பேர் கைது; ஒருவர் தலைமறைவு
தனியார் 'டிவி' நிருபர் மீது தாக்குதல் 3 பேர் கைது; ஒருவர் தலைமறைவு
ADDED : ஜூலை 11, 2025 01:46 AM
குளித்தலை, குளித்தலையில், தனியார் 'டிவி' நிருபரை தாக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை பிள்ளை தோப்பு தெருவை சேர்ந்தவர் சிவா, 34. இவர், சன் 'டிவி'யில் நிருபராக பணிபுரிந்து வருகிறார். குளித்தலை பஸ் ஸ்டாண்ட் அருகில், அவரது பைக்கில் நேற்று மதியம், 3:00 மணிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, எதிரே ஒரே பைக்கில் நான்கு பேர் வந்துள்ளனர்.
அவர்கள், சிவா பைக் மீது மோத வந்த நிலையில், பிரேக் போட்டு உள்ளனர். போதையில் இருந்து நான்கு பேரும், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிவாவிடம் இருந்த மொபைல் போன், பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த சிவா, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார்.
இதையடுத்து, குளித்தலை போலீசார், சிவாவை தாக்கியவர்கள் குறித்து நடத்திய விசாரணையில், குளித்தலை பெரியாண்டார் தெருவை சேர்ந்த சத்தீஸ்வரன்-, 23, கடம்பர் கோவில் அருகேயுள்ள நந்தகிஷோர், 25, மேலகுட்டப்பட்டியை சேர்ந்த கனகராஜ், 22, குளித்தலை புதுப்பாளையத்தை சேர்ந்த தமிம் அன்சாரி, 21, என தெரிய வந்தது.
அதில், மூன்று பேரை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள சத்தீஸ்வரனை, போலீசார் தேடி வருகின்றனர்.