/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேவல் சண்டை நடத்திய மூவர் கைது; பைக் பறிமுதல்
/
சேவல் சண்டை நடத்திய மூவர் கைது; பைக் பறிமுதல்
ADDED : நவ 02, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, நவ. 2-
குளித்தலை அடுத்த, ஊர்நாயக்கன்பட்டி முட்புதுார் பகுதியில், பணம் கட்டி சேவல் சண்டை நடப்பதாக, தோகைமலை போலீசாருக்கு வந்த தகவல் படி, நேற்று முன்தினம் மாலை. 4:00 மணியளவில் எஸ்.ஐ. பாலசுப்பிரமணியன் தலைமையில், போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, சேவல் சண்டையில் ஈடுபட்ட குளித்தலை கோட்டமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன், 22, வினோத்குமார், 19, வை.புதுார் ராஜேந்திரன், 29 மற்றும் சிலர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதில் மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த மூன்று பைக்குகளை
பறிமுதல் செய்தனர்.
தோககைமலை போலீசார் வழக்கு செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.