/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகையிலை பொருட்கள் விற்ற மூன்று பேர் கைது
/
புகையிலை பொருட்கள் விற்ற மூன்று பேர் கைது
ADDED : ஜூலை 05, 2025 01:35 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில், வெவ்வேறு பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர். அரவக்குறிச்சியில், சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அரவக்குறிச்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புங்கம்பாடி பிரிவு அருகே, சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஜெயசித்ரா, 40, மார்க்கெட் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சந்தைப்பேட்டையை சேர்ந்த சக்திவேல், 52, புங்கம்பாடி பாலம் அருகே எஸ்.ஆர்.ஓ., தெருவை சேர்ந்த சக்திவேல், 47, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.