தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/பால் வியாபாரி வீட்டில் திருட்டு சிக்கிய 3 பேர் சிறையில் அடைப்பு

பால் வியாபாரி வீட்டில் திருட்டு சிக்கிய 3 பேர் சிறையில் அடைப்பு

பால் வியாபாரி வீட்டில் திருட்டு சிக்கிய 3 பேர் சிறையில் அடைப்பு


UPDATED : மார் 15, 2026 08:27 AM

ADDED : மார் 15, 2026 08:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2026 08:27 AM ADDED : மார் 15, 2026 08:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளித்தலை:பால் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து, 13 பவுன் நகை திருடிய வழக்கில், கைரேகையை வைத்து, மூன்று பேரை பிடித்த போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பழைய ஜெயங்-கொண்டம் டவுன் பஞ்., வெள்ளையநாயக்கர் களம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 70; பால் வியாபாரி.

இவரது மனைவி பூங்கோதை, 65. கடந்த, 11ல் இவரது வீட்-டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்து, 12 பவுன் நகை, 5 செட் வெள்ளி கொழுசு, 2,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றனர்.

Image 1549267
Image 1549268


வழக்குப்பதிந்த லாலாப்பேட்டை போலீசார், கைரேகைகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை, சிங்காரசோலை பகுதியை சேர்ந்த பார-திராஜா என்பவரின் கைரேகை என்பது தெரியவந்தது.திருப்பூரில் தலைமறைவாக இருந்த பாரதிராஜாவை பிடித்து நடத்திய விசாரணையில், திருட்டில் தொடர்புடைய சேங்கல் பகுதியை சேர்ந்த அருண்குமார், 24, ஈரோடு மாவட்டம், சத்திய-மங்கலம் பகுதியை சேர்ந்த தங்கதுரை, 35, என்பது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், 8 பவுன் நகைகளை மீட்-டனர்.

தொடர்ந்து, மூவரையும் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்ப-டுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us