/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
1,200 போதை மாத்திரை பறிமுதல் பவானியில் மூன்று பேர் கைது
/
1,200 போதை மாத்திரை பறிமுதல் பவானியில் மூன்று பேர் கைது
1,200 போதை மாத்திரை பறிமுதல் பவானியில் மூன்று பேர் கைது
1,200 போதை மாத்திரை பறிமுதல் பவானியில் மூன்று பேர் கைது
ADDED : செப் 09, 2025 01:39 AM
பவானி, பவானியில் ஒரு கூரியர் நிறுவனத்துக்கு நேற்று பார்சல் வாங்க
வந்த மூன்று பேரை, சந்தேகத்தின் அடிப்படையில் பவானி போலீசார் பிடித்து விசாரித்தனர்.
மூவரும் ஈரோடு, காலிங்கராயன்பாளையம் வாய்க்கால் வீதி தாமோதரன், 24; அந்தியூர் தவிட்டுப்பாளையம் வேங்கையன் வீதி விக்னேஷ், 25; பவானி பருவாச்சி டீச்சர் காலனி அப்துல் மாஷீத், 27, என தெரிய வந்தது.
மூன்று பேரும் இன்ஸ்டாகிராம் ஐ.டி.,யில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, ஆன்லைனில் போலி முகவரி கொடுத்து, 1,200 போதை மாத்திரை வரவழைத்தது தெரிய வந்தது. மாத்திரையை பெற வந்தபோது போலீசில் சிக்கியுள்ளனர். மூவரையும் கைது செய்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
மாத்திரைகளை யார் கேட்டு ஆர்டர் செய்தனர். விற்பனை செய்ய எங்கே செல்கிறார்கள்? வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா? என விசாரணை நடப்பதாக, பவானி போலீசார் தெரிவித்தனர்.