/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தண்ணீரை குடித்த மூன்று பசுக்கள் உயிரிழப்பு
/
தண்ணீரை குடித்த மூன்று பசுக்கள் உயிரிழப்பு
ADDED : டிச 05, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, போத்தராவுத்தன்பட்டி பஞ்., ஊமை உடை-யனுார் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு, 36, விவசாயக் கூலித் தொழிலாளி. இவர், மூன்று பசு மாடுகள் வளர்த்து வந்தார். கடந்த, 2ல் மூன்று பசுக்களும் மேய்ந்து விட்டு, வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தன. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று
பசுக்களும் மயங்கி விழுந்து இறந்தது. இதுகு-றித்து வடிவேலு கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.