/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோடங்கிப்பட்டியில் முப்பெரும் பூஜை
/
கோடங்கிப்பட்டியில் முப்பெரும் பூஜை
ADDED : மே 24, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், :கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் பஞ்சாயத்து கோடங்கிப்பட்டி கிராமத்தில் ரெங்கநாதர், அக்னியாயி, பாப்பாத்தி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நிலக்காவல் மற்றும் முப்பெரும் பூஜை நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். கடந்த, 22ல் அக்னியாயி அம்மனுக்கு பொங்கல் வைத்தல், இரவு காட்டுக்கோவில் நிலக்காவல் பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை கிடா வெட்டுதல், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு கரகம் எடுத்து விடப்பட்டு மஞ்சள் நீராட்டுடன் விழா முடிந்தது.