/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாப்பாத்தியம்மன் கோவிலில் முப்பூஜை விழா கோலாகலம்
/
பாப்பாத்தியம்மன் கோவிலில் முப்பூஜை விழா கோலாகலம்
ADDED : ஜூன் 29, 2025 01:05 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, புதுப்பட்டியில் பாப்பாத்தியம்மன், அங்காள பரமேஸ்வரி, ஏழுமலையான், மதுரை வீரன், பெரியசாமி, வீரபத்திரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முன்தினம் கோவிலில் முப்பூஜை விழா கோலாகலமாக துவங்கியது.
மகாதானபுரம் காவிரியாற்றில், அனைத்து தெய்வங்களுக்கும் புது பட்டம் எடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விரதமிருந்த, பக்தர்கள் தலையில் அருள் வந்த பூசாரி தேங்காய்களை உடைத்தார். அதனை தொடர்ந்து, புது மருளாளிகள் கரகம் மற்றும் வேல்களை துாக்கிக் கொண்டு மேளதாளங்கள், வாண வேடிக்கை முழங்க, 8 கி.மீ., தொலைவிற்கு நடந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர், சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.