/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
/
கரூர் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
கரூர் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
கரூர் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஏப் 21, 2024 07:24 AM
கரூர் : கரூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கரூர் லோக்சபா தொகுதியில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்துார், மணப்பாறை, விராலிமலை ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில், 1,670 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிவு பெற்ற நிலையில், மொத்தம், 78.61 சதவீத ஓட்டுக்கள் கரூர் தொகுதியில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, ஓட்டுக்கள் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன், கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு, ஓட்டு எண்ணும் மையத்தில் மூன்று தளங்களிலும் சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு எண்ணும் அறைகளில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் 24 மணி நேர மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதில் ஒரு அடுக்கு, 157 வீதம் மொத்தம், 471 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் உள்ளேயும், வெளியேயும், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு காரணம் கருதி, தீத்தடுப்பு உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

